1.4 நயப்பு
அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை
அவம் நீ
புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை
அடையார் புரங்கள்
இகல்குன்ற வில்லில் செற்றோன் தில்லை
ஈசன் எம்மான் எதிர்ந்த
பகல் குன்றப் பல்உகுத்தோன் பழனம் அன்ன
பல்வளைக்கே
பொருள்:
தேவையற்றவற்றை உரைக்கும் நெஞ்சே!
முப்புரங்களை தனது வில்லால் அழித்த எம்மான், தில்லை
ஈசன், தன்னை எதிர்த்த சூரியனை அன்று ஒளி குறையுமாறு
அவன் பல்லை உகுத்துவனைப் போல, திருப்பழனத்தில் இருக்கும் இறைவனைப் போல உள்ள இந்த, பல வளையல்களை அணிந்த நங்கைக்கு அல்குல் தடம் உள்ளது, கொங்கைகள் உள்ளன, இடையும் உள்ளது.
குழப்பத்தை ஏற்படுத்துவது நெஞ்சு, ஆத்மாவுக்கு
எவ்வித குழப்பமும் இல்லை. அல்குல்-சிருஷ்டி, கொங்கை- ஸ்திதி, முப்புரம் எரித்தது- சம்ஹாரம்.
தோற்றத்துக்கும் நிலைபெறலுக்கும் இடையே உள்ள காலத்தையும் இடத்தையும், அவை மிகக் குறுகியதாக
உள்ளதால், ஊகித்து அறியவேண்டியுள்ளது, தலைவியின் இடையைப் போல. சிவன் மும்மலங்களையும்
(முப்புரம்) ஆணவத்தையும் (தக்ஷனுடன் தவறான சேர்க்கை) அழிப்பவர் சிவன். பழனம்-திருப்பழனம்.
சப்த ஸ்தானம் என்ற உற்சவம் நடக்கும் இடம். வளை-குண்டலினி.
வந்தது இறைவன்தான் என்ற தெளிவைப் பெற்ற
மாணிக்கவாசகர் அந்தக் காட்சி தனக்கு ஒரு பயனைத் தரவே என்று உணர்ந்து இறைவனின் கருணையையும்
சக்தியையும் வியக்கிறார், தனது நெஞ்சை ஆற்றுப்படுத்துகிறார்.
சிற்றின்ப நிலை:
கொளு- வண்டு அமர் புரி குழல் ஒண் தொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்து உள்ளியது. வண்டுகள் ஒலிக்கின்ற அடந்த கூந்தலையும் அழகிய வளையல்களையும்
உடைய தலைவியை தலைவன் விரும்பி அதிசயப்பட்டு நின்றது.
தலைவிக்கு இடை இல்லை அதனால் அவள்
மானிடப் பெண்ணாக இருக்க முடியாது என்ற நெஞ்சிடம் தலைவன், திரிபுர
தகனம் செய்த, திருப்பழனத்தில் உள்ள இறைவனைப் போல
உள்ள இந்தப் பெண்ணுக்கு மிகப் பரந்த அல்குல் அல்லது ஜனன ஸ்தானத்தின் தடம் உள்ளது,
அவளுக்கு மார்பும் இடையும் உள்ளன. அதனால் அவள் காட்சியல்ல, உண்மையான பெண்தான்
என்று கூறுகிறான். இதைக் கண்டதனால் தலைவனுக்கு மகிழ்ச்சி கலந்த அதிசய உணர்வு
ஏற்படுகிறது. (உவகை சார்ந்த மருட்கை).
இந்த நூலின் முதல் நான்கு பாடல்கள்
கைக்கிளை திணையைச் சார்ந்தவை. இவற்றில் தலைவனின் காதல் மட்டும் காட்டப்பட்டது.
தலைவி இதுவரை தோன்றவில்லை.
பேரின்ப நிலை:
கொளு- திருமேனியால் பயன் பெறலாம் என்று
அறிந்தது.
எங்கும் நிறைந்த சர்வ வியாபியான சிவன்
இங்கு இப்போது சிவயோக நாயகியாக வந்திருக்கிறாள் அவளே
சத்குரு. அவளது காட்சி மோட்சம் அளிக்க வல்லது. அவளை சந்திப்பது என்பது சிவானந்த
நிலை. இது மகிழ்ச்சி கலந்த அதிசய உணர்வைத்
தரும்
சிவன் ஆணவத்தை அடக்குபவர் என்பதைக் காட்ட
முப்புரம் எரித்ததும் சூரியனின் பல்லை உகுத்ததும் குறிப்பிடப்பட்டன. இறைவன்
எம்மைப் போன்றவன், நித்தியத்துவமும் ஆனந்தமும் எனக்கும் அவனுக்கும்
பொதுவாக உள்ள தன்மைகள். அதனால் நானே அவன், அவனே நான் என்று
ஆன்மா குறிப்பதைப் போல இறைவன் இப்பாடலில் எம்மான் என்று குறிக்கப்படுகிறார். இது சிவோக
நிலையைக் காட்டுகிறது. தில்லை ஈசன் என்பதால் அவன் ஈஸ்வரத்வத்தை உடையவன், அனைத்தையும்
அடக்கி ஆள்பவன் என்று காட்டப்படுகிறது.
அல்குல் என்பது விச்வயோனி. அனைத்தும் தோன்றும் இடம். காலம்,
இடம், பொருள்கள், உயிர்கள், அவற்றின் தன்மைகள், வாழ்க்கை என்று எல்லாம் தோன்றும் ஸ்தானம்.
உலகில் இதை நாம் காணக்கூடிய இடம் ஒரு உயிர் வெளிப்படும் பெண்ணின் ஜனன ஸ்தானம். அதனால்
மாணிக்கவாசகர் அல்குல் என்கிறார். இது ஸ்ருஷ்டியைக் குறிக்கிறது. அவ்வாறு
படைக்கப்பட்ட உயிர்களை இறைவன் பாதுகாத்து போஷிப்பதை கொங்கைகள் குறிக்கின்றன. இது ஸ்திதியைக்
காட்டுகிறது.
அல்குல்லும் முலையும் இறைவனின் சக்தியையும்
கருணையையும் குறிக்கின்றன. இந்த இரண்டில் ஒன்று மட்டும் இருந்தால் பலனில்லை. ஒன்றைக் கொடுப்பதற்கு அதற்கான சக்தியும் அதை உந்தும்
கருணையும் தேவை. முப்புரங்களை எரித்தது என்பதால் சம்ஹாரம்
காட்டப்படுகிறது.
ஸ்ருஷ்டிக்கும் ஸ்திதிக்கும் நடுவே
உள்ள இடைவெளி மிகக் குறுகியது. அதன் இருப்பை ஊகித்துத்தான் அறிய வேண்டும். இதை நமது
எண்ணங்களில் காணலாம். எண்ணத்தின் தோற்றப் புள்ளியைக் காண்பது என்பது இயலாத ஒன்று. அது
ஒரு எண்ணமாக நிலைபெற்றபின்தான் நாம் அதன் இருப்பை உணர்கிறோம். தலைவியின் இடை
ஊகிக்க வேண்டியதாக உள்ளது என்று கூறுவது இதைக் காட்டவே.
ஸ்ரீவித்யா குருக்களில் சூரியனும்
ஒருவர். மந்திரத்தை உச்சரிக்க பல் அவசியம். தவறான
சேர்க்கையால் தவறான பலனுக்கு மந்திர பிரயோகம் செய்யக்கூடாது என்பதை சூரியன்
தட்சனுடன் சேர்ந்ததைக் காட்டி அவனது பல் உகுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
இது மந்திரங்களைக் கடந்த அஜபா நிலையைக் குறிப்பதைப் போலவும் உள்ளது.
ஸ்ரீ வித்யா நோக்கில் அல்குல் என்பது படைப்பு,
வாக்பவ கூடம், முலை காமராஜ கூடம், இரண்டுக்கும் இடையே இருப்பது அக்னி தத்துவம். அந்த அக்னி, குண்டலினி
சக்தியின் ஒரு உருவம். மிகவும் நுண்மையானது. அதுவே இங்கே இடை எனப்படுகிறது. தலைவியின்
இடையைப் போல கண்ணுக்குப் புலப்படாதது.
திருப்பழனம் என்ற தலத்தின் ஈசர்
ஆபத்சகாயர். முப்புரம் என்பது மும்மலங்கள். இதுவே
நமக்கு வரும் ஆபத்து, அதிலிருந்து நம்மைக் காப்பவர்
ஆபத்சகாயர். திருப்பழனத்தில் சப்த ஸ்தானம் என்று
ஒரு விசேஷமான உத்சவம் நடத்தப்படுகிறது. இது
நந்திதேவரின் திருமண நிகழ்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது. ஏழு தலங்களின் மூர்த்திகளும் இங்கு அந்த நிகழ்ச்சியின்போது
வருகின்றனர். நந்தி எனப்படும் ஆத்மாவை ஏழு ஸ்தானங்களான நமது சக்கரங்களைக் கடந்து இறைவனுடன்
முடிப்பதே இந்தத் திருமணம். சக்கரங்களைக் குறிக்க சிவ தலைவி பல வளையல்களை
அணிந்திருக்கிறாள் என்று கூறப்பட்டது. வளை- வளைந்திருக்கும் குண்டலினி சக்தி. அவள்
காஷ்மீர சைவத்தில் குப்ஜிகா எனப்படுகிறாள். கன்யாகுமாரியில் உள்ள சக்தி இவள்.
வந்தது இறைவன்தான் என்ற தெளிவைப் பெற்ற
மாணிக்கவாசகர் அந்தக் காட்சி தனக்கு ஒரு பயனைத் தரவே என்று உணர்ந்து இறைவனின் கருணையையும்
சக்தியையும் வியக்கிறார், தனது நெஞ்சை ஆற்றுப்படுத்துகிறார்.
1.4 Captivation
O
mind that speaks of unnecessary things!
This woman who is like the Lord of Thillai, who destroyed the three cities with
his bow,
Who once reduced the brilliance of the Sun by striking his teeth,
Who resides in sacred Thiruppazhanam,
Is adorned with many bangles, has wide hips,
She has full breasts, and her slender waist barely exists.
The
hero pacifies his heart that raised doubt about the vision, stating that the
woman has wide hips, slender waist, full breasts and is adorned with many
bangles. She is like the Lord in Tillai who destroyed the Tripura with his bow,
reduced Sun’s brilliance by making his teeth fall and resides in Tirupazhanam. Manikkavasar convinces his heart that the
Divine has appeared only to benefit him and admires its grace.
Only
the mind/heart stirs doubt, the soul has no confusion. Manikkavasakar the purified
soul is pacifying his heart. Hips- creation, breasts- sustenance. The gap
between creation and existence is very fine that one has to guess its presence,
like the lady’s waist. Bangles- the curved kundalini shakti, the Kubjika. Siva
destroys the soul’s three innate impurities (Tripura) and egoity (Sun’s ego and
subsequent erroneous association with Daksha). Tiruppazhanam- Saptha sthana
utsavam.
Simple meaning:
Sutra: The hero admiring the lady who has dense hair where
bees buss and who has adorned bangles. The hero is convincing his heart that stirred
the doubt that she is not real, human, as she lacks a waist. He tells his heart
that she has a wide hip, full breasts and a waist and hence she is not an
apparition but real. The hero is filled
with happiness and wonder by this discovery.
The first four songs belong to Kaikilai thinai (unrequited
love). Only the hero’s love is expressed. The heroine has not yet appeared in the
scene.
Spiritual meaning:
Sutra: her divine form can bestow true fulfillment.
The omnipresent Siva has appeared here as Sivayoga nayaki.
She is the Sathguru, her vision leads to liberation. Sivanandha state is
encountering her. This realization gives happiness and wonder.
Burning of Tripura and destruction of Surya’s teeth were mentioned
to indicate that Siva destroys the three innate impurities and egoity. The Lord
is referred to as ‘emmaan’ to indicate the soul’s realization that he is like
me. Both of us have the commonality of Eternal
existence and bliss. I am he and he is
me. This is the state of Sivoham. Calling his Tillai Isa is to indicate that he
possesses Isvaratvam, the quality of controlling and ruling everything.
Hips (alkul)- Vishva yoni, the place from which time, space,
entities, lifeforms, qualities and even thoughts emerge. It indicates creation,
Srishti. Such a locus in the manifested
world is a woman’s generative organ. Hence, Manikkavasakar indicates the
heroine’s hip.
Breasts- the Lord’s role of sustaining the entities that
emerged so, sthithi.
These two refer to the Lord’s power and mercy, the two
essential qualities to grant anything. It is useless if only one of them is
present.
Burning the Tripura indicates dissolution or samhara. The
gap between creation and sustenance is very narrow. We see this when thoughts arise in us. We are
aware of a thought only after it reaches the sthithi or existence. Heroine’s
narrow waist whose presence could be only inferred indicates this.
In Srividya sampradhaya Surya is one of the two gurus. Possessing
the full set of teeth is essential for proper recitation of mantra. One of the
punishments for Brahmins in ancient times was to knock out their teeth and thus
take away their occupation, sustenance. This also indicates the ajapa state
where mantras are only contemplated, not recited.
The hips indicate Vagbhava kuta and breasts the Kamaraja
kuta. The Agni tattva separates them.
This fire, a form of kundalini is very subtle that one has to guess its
presence.
The Lord in Tiruppazhanam is called Aapathsahaayar- the
friend at the time of danger. The greatest danger a soul faces are the three
innate impurities, the Tri cities. The one who protects us from this danger is
Aapathsahaayar. An important festival in Tiruppazhanam is Sathpa Sthanam,
Nandideva’s marriage. Gods from seven sacred sites visit Tiruppazhanam on the occasion.
Nandi, the soul, is married to the Lord, by joining
it with the Divine through seven sacred sites, the chakras. Heroine is said to be wearing many
bangles to indicate the chakras. (Valai- bangles). It also indicates the
kundalini shakti which is curved.
Kashmir Saivism calls this form Kubjika.
The Goddess in Kanyakumari is Kubjika.
The clarity born from divine experience shows Manikkavasakar
that the Divine has appeared to him only to benefit him. He is admiring the Lord’s power and mercy
here.
No comments:
Post a Comment