Monday, 10 March 2025

1.7 Braving the union

                                     1.7 புணர்ச்சி துணிதல் 

ஏழுடையான் பொழில் எட்டுடையான் புயம்‌ என்னை முன்னாள்‌ 

ஊழுடையான் புலியூர் அன்ன பொன் இவ்‌வுயர் பொழில் வாய்ச்‌ 

சூழ் உடை ஆயத்தை நீக்கும்‌ விதி துணையாம் மனனே 

யாழுடையார் மணங்காண் அணங்‌காய்வந்‌தது அகப்பட்டதே. 

பொருள்: 

மனமே! அவனது அருளைப் பெறுவதற்கு முன் என்னை ஆளும் ஊழ்வினையை உடையவனும் ஏழு பொழில்களையும் எட்டு புயங்களையும் உடையவனுமான அவன் இருக்கும் புலியூர்  போல பொன்னான இந்த பொழில். இங்கு அவளைச் சூழ்ந்திருக்கும் துணையை நீக்கும் விதி எனக்குத் துணையாக உள்ளது, மனமே! யாழுடைய கந்தர்வர்கள் திருமணம் போல இங்கு தேவமங்கையாக வந்தது எனது அகத்துள் புகுந்தது. 

பொழில்- காடு, உலகம், புயம்- கைகள், ஊழ்-விதி, நியதி.

ஏழு உலகங்களாக, உணர்வு நிலகளாக இருப்பவன், எண் குணத்தான், ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், ஆத்மா என்ற எட்டாக இருப்பவன், எட்டுவிதமான சக்திகளாக, வர்ணங்களாக, அட்ட வீர ஸ்தானங்களாக இருப்பவன், என்னை காலகாலமாக ஆள்வதை நியதியாக உடையவனின் புலியூர் போல இந்தப் பொழில்/உலகம், சக்கரம் உள்ளது. என்னைத் தடுக்கும் பிற தன்மைகள், ஆயங்களை, விலக்கும் விதி எனக்குத் துணையாக உள்ளது. மணம் காண் அணங்கு-  ஆத்மாவுடன் சேரும் சிவம்) யாழ்-தண்டுவடம், அதை வீணையாகவும் குறிப்பது வழக்கம். அவ்வாறு வந்த நின்ற சக்தி என் அகத்தினுள் புகுந்தது, எனக்கு அகப்பட்டது.

சிற்றின்பம்:

இங்கு சிவதலைவி வந்தது எனது விதியை நீக்கக்கூடிய இறையருளால்.  மனமே! நமக்கு அந்த விதி துணையாய் இருக்கிறது.  இந்த தேவமங்கை போல இருப்பவள் காந்தர்வ மணம் செய்பவர்போல எதிரில் வந்திருப்பது அதனால்தான். 

பேரின்ப நிலை: 

மனமே! ஏழு உலகங்களையும் உடையவன், ஏழு உணர்வு நிலைகளாக இருப்பவன்,  எட்டு திக்குக்களையும் ஆள்பவன், எண் குணத்தான், எட்டு வீர ஸ்தானங்களாக இருப்பவன்,  எனக்கு ஞானம் ஏற்படுவதற்கு முன்பிலிருந்தே என்னை ஊழ்வினை என்பதால் ஆண்டவன், என்னை முற்காலம் முதல் நியதியாக உடையவன், அவனது புலியூர் போல உள்ளது இந்தப் பொழில். இந்த பொழிலில் தோழியர் கூட்டத்தை விலக்கி இந்த மங்கையை மட்டுமே நிற்கச் செய்த விதி எனக்குத் துணையாக உள்ளது. பிற சக்திகளை விலக்கி குண்டலினி சக்தியை இந்தக் காட்டின் வாசலில் குண்டலினி புகும் துளையின் வாயிலில் நிற்க வைத்த விதி எனக்கு உதவியாக உள்ளது.  இவ்வாறு இங்கு நிற்பவள் யாழுடையவள்- எனது நாடிகளையும் தண்டுவடத்தையும் கையில் கொண்டவள், 

என்னை முன்னம் ஊழுடையான்- ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம் அநாதி என்பதைக் குறிக்கிறது. விதியைப் படைத்த இறைவன் ஆத்மாக்களைக் காக்கவேண்டும் என்று தனக்குத் தானே விதித்துக்கொண்ட விதிக்கேற்ப, நியதிக்கேற்ப, இங்கே மானுட உருவில் வந்துள்ளான். காந்தர்வ மணம் என்பது யாருக்கும் தெரியாமல் தலைவனும் தலைவியும் காதல் கொண்டு மணம் செய்துகொள்வது. இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள உறவு தனிப்பட்டது.  திருமூலர் அதை ஒரு தாய் எவ்வாறு தனது மகளிடம் தான் அவளது தந்தையுடன் முந்தைய இரவு இருந்ததைப் பகிர்ந்துகொள்ள மாட்டாளோ அதைப் போன்றது என்கிறார். அது ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ள உறவு அல்ல, காதலனுக்கும் காதலிக்கும் இடையே உள்ள பேரன்புஒருவரை விட்டு ஒருவரால் ஒரு கணம்கூட தனித்திருக்க முடியாத, அளவுகடந்த  அன்பு. 

யாழுடையார்- கந்தர்வர்கள். தமது உணர்வு நிலை அநாகதத்தை அடைந்தால் கந்தர்வ நிலை வாய்க்கிறது. தில்லை என்பதைப் போல இதுவும் அன்பின் உறைவிடமான அநாகதத்தைக் குறிக்கிறது.

மூலாதாரம், கீழ்நிலையில் பயம் முதலிய உணர்ச்சிகளையும் மேல் நிலையில் உறுதி, திடத்தன்மை ஆகியவற்றையும் குறிக்கிறது. அநாகத நிலையில் உணர்வு இருக்கும்போது கீழ் சக்கரங்களின் தன்மைகளை உருமாற்றி உயர்ந்தவையாக்கி தனது நிலைக்குப் பயன்படுத்திக்கொள்கிறது.

இப்பாடல் மூலம் ஆத்மா தன்னிடம் இறைவனுக்கு அன்பு உள்ளது என்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றாகக் கலக்கத் துணிவு பெறுகிறது

1.7 Braving the union

One with seven groves/worlds and eight hands/aspects, previously

Ruled me as fate- at the entrance of this supreme grove like his Puliyur,

The rule/fate is my companion in removing the surrounding associates, Mind!

That which came as the lady for marriage of those who play the harp has come within.

Simple meaning:

O Mind! This grove is the Puliyur of the one who possesses seven groves and eight hands and who ruled me as fate before. Fate is my helper in removing the surrounding group of associates. This celestial maiden who has come here for Gandharva wedding has entered my heart.

 

The heroine came here only due to Divine grace that can dispel my fate. O mind! That fate remains as our help now. Hence, this maiden who looks like a celestial has come here as if interested in Gandharva wedding.

Spiritual meaning:

O mind! This grove looks like the Puliyur of the one who rules the seven worlds, or states of consciousness, the eight directions, the one who functions as the five elements, the Sun, the Moon and the soul, the one who remains in the ashta veera sthanam, eight places of valor, the loci of those who brave spiritual journey, and the one who has made it his rule to protect me, since long. The fate which bound me before now is helping me remove other forces that were pulling me towards the world and isolate kundalini shakti for my spiritual journey. The one who stands here is like the Gandharva who play the harp, she plays my spinal cord and the nadi. She is the Dharaa shakti who rules Gandha or the subtle quality of smell in the muladhara. She has now entered my aham or locus, sva adhishtanam. Kundalini entering the hole of the sushumna nadi, going to svadhishtana marks the beginning of spiritual journey.  

Gandharva wedding is when the hero and heroine decide to consummate their love without anyone’s knowledge. The relationship between the soul and the Divine is eternal. It is very personal, not that between a Lord and his subordinate but one among equals with supreme love as the foundation that they cannot remain without each other for even a moment.  The Lord who put forth fate to rule lifeforms before has now  made it his rule, Niyati, to unite with me. Hence, he has come in a human form.  

Gandharva is the state when consciousness reaches the anahata chakra. Like Tillai this also represents the locus of love.

Muladhara, in its lower state stirs emotions such as fear. In its higher state it gives fortitude, resolution a solid drive. When awareness reaches higher chakras the qualities of the lower chakras are transformed and used for its purpose. 

No comments:

Post a Comment