Friday, 14 March 2025

1.10 Seeking a word

  10. கிளவி வேட்டல்

அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல்‌
வளவிய வான்கொங்கை வாள் தடம் கண் நுதல்‌ மாமதியின்‌
பிளவியல்‌ மின்னிடை பேரமை தோளிது பெற்றி என்றால்
கிளவியை என்னோ இனிக் கிள்ளையார் வாயில் கேட்கின்றதே.

பொருள்:
தலைவியின் அழகைக் கூறி அவளிடமிருந்து தலைவன் ஒரு சொல்லைப் பெற விழைகிறான்.
அனைத்தையும் அனைவருக்கும் அளப்பவன், யாவர்க்கும் அறிவாக இருப்பவன், அறிவுக்கு அரியவன், அவனது தில்லை அம்பலம் போல பரந்த அழகிய வானம் போன்ற மார்பகம், வாள் போன்ற கண்கள், மதியின் பிறை போன்ற நெற்றி மின்னல் போன்ற இடை, அமை மூங்கில் போன்ற தோள் ஆகியவற்றை பெற்ற நீ உன் வாயால் கிளி போல ஒரு சொல்லை சொல்வாயா?
ஆன்மா குருவிடமிருந்து உபதேசத்தை வேண்டுகிறது. குருவின் ஒவ்வொரு தன்மையும் சீடனுக்கு ஒரு உதவியை செய்கிறது.

அளவி- மா என்ற சொல்லின் விளக்கம். காலத்தை, அனுபவங்களை, குணங்களை, செயல்களை அளப்பவர். தத்துவங்களை அளவுக்கு உட்படுத்தி உலகமாக தோன்றச் செய்பவர். அந்த அளவையும் அவர்தான் ஆனால் தான் அளவுக்குட்படாதவர் அறிவரியோன்- அவரை அறிவால், விஷய ஞானத்தால் அறிய முடியாது. திருவாசகத்தில் அவரை, மாற்ற மலம் கழிய நின்ற மறையோன் என்கிறார் மாணிக்கவாசகர். அந்த மறையோனை காண்பது அரிது.

யாவர்க்கும் அறிவு அரியோன்- பொருள்களைக் காட்டும் ஒளி இறைவன். ஆனால் அந்த அறிவொளியால் இறைவனைக் காட்ட முடியாது, அவன் அந்த அறிவிற்கு அரியவன்.

தில்லை அம்பலம் போல பரந்த வான் கொங்கை- பரந்த மார்பு பர அபர ஞானங்களைத் தன்னுள் கொண்டது. பர ஞானம் மோட்சத்தையும் அபர ஞானம் உலக இன்பங்களையும் தருகிறது. உலக இன்பங்களை அடிப்படையாகக் கொண்டு மோட்சம் தேடப்பட வேண்டும் என்பதையும் இறைவன் இக பர இன்பங்களைத் தருபவர் என்பதையும் இது குறிக்கிறது. மார்பு என்பது அநாகத சக்காரத்தைக் குறிக்கிறது. வான் கொங்கை- வானம்- தகராகாசம் எனப்படும் இதய ஸ்தானம். அது ஒளிபொருந்தியது என்பதனால் அதை தில்லை அம்பலம் என்கிறார் மாணிக்கவாசகர்.

வாள் கண்- கூர்மையான பார்வை, அவரது தீட்சை பந்த பாசங்களை வெட்டுகிறது. ஞான வாள் ஏந்தும் ஐயர் என்று மாணிக்கவாசகர் இதைக் குறிப்பிடுகிறார்.

பிளவுபட்ட மதி போன்ற நெற்றி- அதிலிருந்து ஞான அமுதம் பொழிகிறது. இது லலாட சக்கரத்தை குறிக்கிறது.

மின்னிடை- இருப்பதுபோலவும் இல்லாதது போலவும் தோன்றுவது. இடை என்பது அர்த்தசந்திர வடிவில் இருக்கிறது. அது ஹோம குண்டம்போல உள்ளது. அங்கு எரிவது குண்டலினி அக்னி. இது சுவாதிஷ்டான சக்கரத்தை குறிக்கிறது.

பேரமை தோள்- பெருமை வாய்ந்த அமை போன்ற தோள். அமை என்பது ஒருவகையான மூங்கில் . அது வழவழப்பாக, முள் இல்லாமல் இருப்பது. தொடுவதற்கு மென்மையாக குளிச்சியாக இருக்கிறது. அது பிறவி என்னும் பிணியை, துன்பத்தை விலக்கி அருள் தருகிறது. விபூதியையோ திருமண்ணையோ தோள்களில் தரித்துக்கொள்வது இங்கு உள்ள சக்கரங்களைக் குறிக்கவே.

கிள்ளையார்- கிளி, அருள் சக்தியைக் குறிக்கிறது. கிளவி- ஒரு வார்த்தை, கிளவிகள் அல்ல. இங்கு ஒரு சொல் எனப்படுவது ஓம்காரம் அல்லது ஏகாக்ஷரி மந்திரம். நமசிவாய என்ற மந்திரமாகவும் இருக்கலாம். குருவின் ஒவ்வொரு பகுதியும் ஒரு இன்பத்தை, பலனை தந்தது. அவரது மொழி பூரண இன்பத்தைத் தருவது.

இவ்வாறு வான் கொங்கை-எல்லையற்ற பரம்பொருள், அம்பலம், தன்னை பர அபர ஞானங்கள் என்று குறுக்கிக் கொள்கிறது. வாள் தடம் கண், படைக் கண்- அந்த ஞானத்தில் ஏற்படும் சந்தேகத்தை விலக்குவது. நுதல் மாமதியின் பிளவு- பரிபூரண ஞானம், அனுபவம். மின்னிடை- ஞானம் சக்தியாக இருப்பது, பேரமை தோள்- செயல்பாடு. பரிபூரண ஞானம் செயலாகவும் சொல்லாகவும் வெளிப்படுகிறது. இங்கு சொல் வெளிப்படாததால் ஆன்மா அதை வேண்டுகிறது.

1.10 Seeking a word
The measure, for everyone, awareness, the rare one, like the Tillai Ambalam
Expansive sky-like breasts, sword-like eyes, forehead like crescent moon,
With a gap, lightning-like waist, bamboo-like shoulders- you possess these
When will I hear the word from the sweet mouth like a parrot.

Simple meaning is obvious. The hero describes the heroine’s beauty and seeks a word from her.

Spiritual meaning:
The soul is seeking upadesa from the guru. Each aspect of the guru benefits the disciple in a specific way.
The measure-he measures the disciples knowledge, nature, time and grants him knowledge. The Lord measures the soul’s karma and gives it a life. He measures or limits the tattva and time with which he constitutes the manifested universe. He is the intellect or awareness but common awareness cannot comprehend him. It is said that one grave mistake a student makes is considering his guru has a mere mortal. The Guru tattva is immeasurable.

Breasts expansive like the sky- the space which contains knowledge about this world and beyond. This shows that the Lord grants both, the worldly pleasures and spiritual liberation. Also, the path to spiritual liberation is through worldly happiness. The breast also refers to the anahata chakra and the Dahara akasha the effulgent space within us, the Tillai, where the Lord resides.

Sword-like eyes. Guru’s vision cuts the disciples’ limitations.

Forehead like the crescent moon-nectar of wisdom drips from the lalata and manifests as experience. Jnana becomes a lived wisdom.

Lightning-like waist- its presence should be guessed. It is like a crescent moon, one of the shapes of a firepit. The fire of kundalini burns here. It refers to the svadhishtana chakra.

Shoulders like amai bamboo. This variety of bamboo is soft and smooth without any thorns and cool. It removes the tapa or fire of samsara. The practice of adorning Vibhuti or vaishanava symbol on the shoulders indicates this.

Words of a parrot- the parrot indicates Arul shakti or power of grace which will be playing a major role later. The hero is asking one word which may be referring to Om, or akakshari mantra, it may also be namasivaya.

Thus, the disciple has enjoyed the benefits of every aspect of the guru except his words.
The limitless Divine shrinks itself into para and apara jnana and confers them on the disciple. It cuts any doubt in the teaching with its sword-like eyes, makes the knowledge an experience, gives the shakti to handle the wisdom and the power to transform it into action. A fully complete wisdom emerges as words and actions. Now, the disciple is seeking the word which will become action.

No comments:

Post a Comment