Saturday, 8 March 2025

1.6 Rejoicing in the Divine

 1.6. தெய்வத்தை மகிழ்தல் 

வளைபயில்‌ கீழ் கடல் நின்று இட மேல்கடல்‌ வான் நுகத்தின்‌ 

துளைவழி நேர்கழி கோத்தெனத்‌ தில்லைத் தொல்‌லோன் கயிலைக்‌ 

கிளை வயின்‌ நீக்கி இக்‌ கெண்டை அம் கண்ணியைக்‌ கொண்டு தந்த

விளைவை அல்‌லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கன.

பொருள்: 

சங்கு நிறைந்த கீழ்க் கடலில் நின்று இட்ட ஒரு கழி மேல் கடலின் பெரிய நுகத்தினுள் இருக்கும் துளை வழியே சென்று கோத்ததைப் போல தில்லையில் இருக்கும் பழமையானவன் கயிலையில் இருந்த இந்த மீன் போன்ற கண்களை உடையவளை அங்கிருந்து நீக்கி இங்கு கொண்டு தந்த விளைவை அல்லால் வேறு தெய்வத்தை வியக்க மாட்டேன், விரும்பமாட்டேன். 

சிற்றின்ப நிலை:

கொளு- பயந்தோரை பழிச்சல்.  இப்பெண்ணைப் பெற்றவர்களைப் புகழ்தல். 

கயிலையிலிருந்த இந்த மீன் போன்ற கண்களையுடைய பெண்ணை நேராக இவ்விடம் கொண்டு சேர்த்தல் என்ற விளைவை, எவ்வாறு கீழ் கடலில் இட்ட கோல் மேல் கடலில் உள்ள நுகத்தடியில் உள்ள துளையை நேராக அடையுமோ அதைப் போன்ற விளைவை அல்லால் பிற தெய்வங்களை வியக்க மாட்டேன், விரும்ப மாட்டேன்.  

கீழ்க்கடலில் இட்ட கழி சரியான வழியில் செலுத்தப்பட்டு மேல் கடலுக்கு செல்ல வேண்டும்.  அங்கு உள்ள நுகத்தடியை அடைந்து அதனுள் இருக்கும் துளையினுள் புக வேண்டும்.  இது எளிய காரியம் அல்ல. அதைப்போலவே கயிலையில் இருந்த இந்தப் பெண்ணை எங்கும் வழி தவறிவிடாமல் தலைவனிடம் கொண்டு சேர்ப்பது என்பதும் மிகக் கடினமான ஒரு செயல்.  அந்த செயலை நடத்திய விளைவை தலைவன் போற்றுகிறான். 

பேரின்ப நிலை: 

கொளு- தன் தவத்தை வியத்தல் 

தேவர்களும் முனிவர்களும் நிறைந்த கயிலையிலிருந்து இக்கெண்டை மீன் போன்ற கண்களையுடைய சிவதலைவி பிரிந்து இங்கு வந்தது எனது தவத்தின் பயனே என்று ஆத்மா வியக்கிறது.  கடலில் இட்ட கழி அலைகளால் அலைப்புறுவதைப் போல ஆத்மா மலங்களாலும் மாயையாலும் பிறவிக் கடலில் அழைக்கழிக்கப்படுகிறது.  கழியை ஏற்றுக்கொள்ள மேலைக் கடலும் நுகத்தடியும் தயாராக இருப்பதைப்போல சிவம் ஆத்மாவுக்காக காத்திருக்கிறது.  ஆத்மா வழிதவறாமல் இருக்க ஆத்மாவின் தவமும்  இறைவனின் கருணையும் துணை புரிகின்றன.  இவ்வாறு ஜீவ சிவ ஐக்கியம் நடைபெறுகிறது. 

கெண்டைக் கண்ணி என்பது மீனாட்சியைக் குறிப்பதைப்போல உள்ளது.

ஆத்மாவின் தவப்பயன் இறைவனை அதனிடம் கொண்டு வருகிறது- பதி புண்ணியம்.  அவ்வாறு ஆத்மாவை அடைந்த இறைவன் அதனுடன் பொருந்துவது சிவ கருணையால். அதற்கு உதவுவது சக்தி, கெண்டைக் கண்ணி. பிராணன். பிராணனை குருவாக குறிப்பது, ஆஞ்சநேயரை குருவாக பிராணனாக ராமரையும் சீதையையும் சேர்ப்பவராகக் குறிப்பிடுவதை ஒக்கும்.

வளை-வளைந்த குண்டலினி. அதன் இருப்பிடம் சுவாதிஷ்டானம். நீர் தத்துவத்தைக் குறிக்கும் அந்த சக்கரம் நமது உணர்ச்சிகள் எதிர்விளைவுகள் என்பவற்றைத் தோற்றுவிக்கும் தளம். அவ்வாறு அலையும் ஆத்மாவின் கீழ் உணர்ச்சிகளை மேலானவையாக மாற்றுவது இறைவனின் செயல். உதாரணம் காமம் என்பதை இறைவனிடம் அன்பு என்று மாற்றுவது. இவ்வாறு ஆத்மாவின் காமம், குரோதம், லோபம் என்பது போன்ற குணங்களை, கழிக்க வேண்டியவைகளை, ஆன்மீகத்துக்கு உதவும் குணங்களாக மாற்றும்போது உணர்வு பிரமரந்திரத்தை அடைகிறது. இவ்வாறு இந்த குணங்கள் அழிக்கப்படுவதில்லை, மடைமாற்றப்படுகின்றன. இவையே பிராம்மி, மாகேஷ்வரி முதலியவர்களான அஷ்ட மாத்ருகாக்கள்/ மாதாக்கள் என்று குறிக்கப்படுகின்றனர். இந்த நிலையை அடையும்போது ஆன்மா அனுபவிப்பது ஆனந்தமய சாகரத்தை.  நாதத்தின் உயர் நிலையை. இந்த செயலைச் செய்ய சக்தி நிபாதம் நடைபெறுகிறது. அப்போது செய்பவர், செயல், விளைவு என்ற நிலை மாறி எவ்வாறு எண்ணமே செயலாக மாறுகிறதோ அதைப்போல விளைவே செய்பவர் என்றாகிறது.

தபஸ் என்பது உள்ளே எழுப்பும் அக்னியைக் குறிக்கிறது. மாணிக்கவாசகர் அந்த அக்னியை வணங்குகிறார்.

இருப்பவை.  அவை ஒருவரது உணர்வு நிலைக்கேற்ப தோன்றும். எப்போதும் நிரந்தரமாக இருப்பவை அல்ல. கீழைக் கடல் என்பது மூலாதாரத்தையும் மேலைக் கடல் என்பது சகஸ்ராரத்தையும் குறிக்கின்றன என்று கொண்டால்  அவற்றின் இடையே பயணிப்பது சூழுமுனை நாடியையும் அதனுள் பயணிக்கும் குண்டலினி சக்தியும் ஆகும்.  இங்கு குறிப்பால் உணர்த்தப்படும் தத்துவம், குண்டலினி சக்தி தன் வழி தவறாது கழியைப் போல நேராக இருக்கும் சூழுமுனை நாடியின் மூலம் ஆக்ஞா சக்கரத்தை அடைந்து பிரம்மரந்திரம் எனப்படும் துளையினுள் புகுவது.  நுகத்தடி என்பது நமது புருவங்களையும் அதில் உள்ள துளை என்பது ஆக்ஞா சக்காரத்தையும் குறிக்கும். இந்த அரிய செயல், சக்தி நிபாதம் அல்லது சக்தி கீழே இறங்கி வருவதால் நடைபெறுகிறது.  இதையே தலைவி கயிலாயத்திலிருந்து உலகுக்குள் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது.  கயிலாயம் என்பது சகஸ்ராரத்தைக் குறிக்கும்.  இவையனைத்தும் தெய்வ அருளால் நிகழ்வது.  அதற்கு ஆத்மா தன்னை தவத்தின் மூலம் தயார்ப்படுத்திக் கொள்கிறது. இங்கு கெண்டை அல்லது மீன் கண்ணி என்று குறிப்பிடப்படுவது பிராணாயாமத்தை.  மீன் என்பது யோகத்தில் பிராணாயாமத்தை குறிக்கிறது.

ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் மீனாட்சி ராஜஷ்யாமளாவைக் குறிக்கிறாள்.  அவளது தலம் அநாகத சக்கரம்.  அந்த சக்கரத்தை தில்லை என்று யோக சம்பிரதாயம் அழைக்கிறது.  இதைப்போல ஆக்ஞா சக்கரம் காசி என்றும் சகஸ்ராரம் கயிலை என்றும் மூலாதாரம் திருவாரூர் என்றும் பரிபாஷையில் குறிப்பிடப்படுகின்றன. 

இங்கு மாணிக்கவாசகர் குறிப்பது ராகத்தை இச்சா சக்தியாக, சங்கல்ப சக்தியாக மாற்றுவதை. சக்தி நிபாதம் இதை நிகழ்த்துகிறது. பஞ்ச பூதங்களில் பூமி கிரியா சக்தியாலும், நீர் ஞான சக்தியாலும் அக்னி இச்சா சக்தியாலும் படைக்கப்படுகின்றன. இப்பாடலில் மாணிக்கவாசகர் இச்சா சக்தியைப் போற்றுவேன் வியப்பேன் என்று கூறுகிறார்.  

ஸ்ரீ சக்கரத்தில் உள்ள அனங்க குசுமா முதலிய எட்டு சக்திகள் மன்மதன் நமது மனதில் தோற்றுவிக்கும் உணர்வுகள். அவரது சக்திகள். பிராம்மி, மாகேஸ்வரி என்ற இந்த எட்டு சக்திகள் மடைமாற்றம் அடையும்போது வாக் தேவிகள் எனப்படும் எட்டு சக்திகளாகின்றனர். இதைத் தடுப்பது நமது அகங்காரம். இதற்கு உதவுவது கும்பக பிராணாயாமம். இரு மீன்கள் எதிர்திசைகளில் பயணிப்பது போன்ற சித்திரம் இதைக் குறிக்கிறது. உள் மூச்சும் வெளி மூச்சும் பரிபூரண சமநிலையில் இருப்பதே கும்பகம். இந்த நிலையில் மனமும் அகங்காரமும் ஆத்மாவைவிட்டு அகல்கின்றன. ஆத்மாவின் ராகம் தெய்வீக இச்சா சக்தியாகிறது. 

 

1.6 Rejoicing in the Divine

Like a tiny stick, set afloat in the conch-filled lower ocean,
Carried upward and inserted through a minute hole in the yoke floating in the upper ocean,
The ancient One of Thillai remove this fish-eyed maiden from Mount Kailash
And brought her here. Beyond this wondrous act, I shall neither marvel at nor seek any other deity.

 

Simple meaning:

Sutra: Praising those who made this happen.

I will praise only the cause of bringing here this fish-like eyed woman from Kailai, an act like directing a stick set afloat in the conch-filled lower ocean is directed to an upper/westward ocean and made to enter a hole in a yoke floating there.  I will not admire or praise any other divinity.

Spiritual meaning:

Sutra: Rejoicing his tapas

The soul marvels the austerity (tapas) that brought forth the Divine, the woman with fish-like eyes- an otherwise impossible task akin to guiding a stick through an immense ocean to another ocean and make it pass through a hole in a yoke floating there.  This process is enabled by the soul’s tapas and divine grace. The shakti represented by the prana, symbolized by the fish, and her grace, signified by its eyes  or kataksha, the eyes, made this possible. Anjaneya in Ramayana represents this force that brought together Rama and Sita.

Valai- curved, kundalini and conch. The Svadhishtana chakra, the seat of kundalini where our emotions and tendencies such as kama, krodha, and lobha arise. These emotions not destroyed but redirected, transformed into higher emotions.  In the tantric tradition they are represented as eight mothers, the ashta matrukas, Brahmi, Maheswari, Kaumari and so on. When redirected these energies lead the soul to experience the ocean of bliss or Anandha Sagaram, the higher state of nadha.  This process is enabled by Shakti nipaadham or descent of grace, that removes the triadic state of doer, action and result. The result dissolves in the doer like thoughts dissolving into action.  

In Srividya sampradhaya Meenakshi (the fish-eyed one) represents Rajashyamala, Devi’s manas, the source of will (iccha) and wisdom (jnana). Her locus is the anahatha chakra, which is usually referred to as Tillai. Kasi represents ajna chakra and Kailasa the sahasrara. The descent of the lady from Kailaya to Tillai symbolizes shakti’s descent into the heart awakening the will.

The word tapas originates from taapa or fire.  Manikkavasakar is describing the profound process of converting raga into iccha, the pure will or sankalpa shakti.  Among the elements earth is created by Siva and Shakti’s kriya, water by jnana and fire by iccha. The obstacle to this process is our ahamkara or I consciousness.  The kumbaka pranayama makes this possible. The fish represent the pranayama, the image of two fish floating in opposite directions represent the inhalation and exhalation, them in perfectly aligned represents kumbaka.  This is the state where the mind disappears and the person’s identification with an individual state leaves him.  This is the effect that Manikkavasakar declares that he will praise and admire.

In the Sri chakra, the bindu is called sarva anandhamaya chakram.  The eight petals that represent the eight qualities stirred by Manmatha or desire, when transformed become the upper eight triangles, the vak devis. Thus, the matrukas are the vak devis when transformed.      

No comments:

Post a Comment