Monday, 24 March 2025

1.18 Recognizing the friend

  1. 18. பாங்கியை அறிதல்

உயிர் ஒன்றும் உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவளுக்கு என்னோடு என்ன
பயில்கின்ற சென்று செவியுற நீள் படைக் கண்கள் விண் வாய்ச்
செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச் சிற்றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தன் அருள் எனலாகும் பணி மொழிக்கே.

பொருள்:
வானத்தில் முப்புரங்களை அழித்தவன் தில்லை சிற்றம்பலத்தில் தொடர்ந்து நடனமாடும் கூத்தனின் அருள் என்ற இவளுக்கும் காதுவரை நீண்ட கண்களையும் இனிமையான சொற்களையும் உடைய எனக்கும் ஒரே உயிர், ஒரே மனம், ஒரே பெருமை.

தலைவி தனது தோழிக்கூட்டத்தில் ஒரு தோழியை அடிக்கடி பார்க்கிறாள். அவளே தனது உயிர்த்தோழி என்றும் அவள் மூலம் தன்னை அடையலாம் என்றும் அவள் கண்ணால் காட்டுகிறாள் என்று தலைவன் உணர்கிறான். அந்த தோழி அன்று ஒருநாள் முப்புரம் எரித்தவனது, தில்லை சிற்றம்பலத்தில் இருக்கும் கூத்தனின் அருள்.

சிவபெருமான் முப்புரங்களை எரித்தபோது அந்த அசுரர்களுக்கு நன்மையே செய்தான். அவர்களை தனது வாயில் காப்போராக நியமித்தான். அதைப் போல அருள் சக்தி தலைவனின் மும்மலங்களை அழித்து தூய்மைப்படுத்தி சிவ போகத்தை அருள்வாள் என்று தலைவி குறிப்பால் உணர்த்துகிறாள்.

தோழியின் உயிரும் உளமும், அதாவது இருப்பும் எண்ணமும் தலைவியின் உயிரும் உளமும் ஒன்றாக இருக்கின்றன. இருவரது இலக்கும் தலைவனை, ஆத்மாவை, தலைவியுடன், சிவத்துடன் சேர்ப்பது. அதனால் அவளது உதவியால் தன்னை நிரந்தரமாக அடையலாம் என்று தலைவி, சிவம், உணர்த்துகிறாள்.

இந்த உபதேசத்தைத் தருவது இறைவனின் கண்கள், நயன தீக்ஷை. உயிரின் தாபத்தை, சந்தேகத்தை, பயத்தை சிவன் முப்புரங்களை செற்றதைப் பல தலைவியின் கண்கள் போரிட்டு வெல்வதால் அவை படைக்கண்கள். அவளது பார்வை அல்லது கடாக்ஷம் மந்திரங்களாக அவளது வாக்காக உயிர்கள் கேட்கின்றன என்பதைக் காட்ட அவளது கண்கள் காது வரை நீண்டு உள்ளன.

அவளது வாய்மொழி பணி மொழி, அனைவரையும் பணியச் செய்யும் மொழி, பிறரை செயலில் ஈடுபடுத்தும் வாக்கு. அதனால் தலைவனுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று அவள் வழி காட்டுகிறாள்.

இறையுணர்வு எவ்வித முயற்சியுமின்றி கிடைத்தாலும் அதை நிரந்தமானதாக மாற்ற இறையருளின் துணையுடன் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று இப்பாடல் உணர்த்துகிறது. தில்லை சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமானின் திருவுருவம் அவரது அருளைக் காட்டி இதை எவ்வாறு நிகழ்த்துவது என்ற வழிமுறையைத் தருகிறது.

செயிர்- கோட்டை. கூத்தன்- அவனது நடனங்கள் அல்லது செயல்பாடுகள் அவனது அருளே.
இத்துடன் இயற்கைப் புணர்ச்சி முடிகிறது.

1.18 Recognizing the friend

Our soul is but one, our mind is also one, our glory is also one for her and me”
Points the lady with long eyes extending up to her ears, in the Tillai Citrambalam
Of the dancer who destroyed the three fortresses in the sky.
Showing his grace, the one with a sweet voice.

Simple meaning:
The heroine points to her friend, the Lord’s grace or Arul, as her closest companion. She indicates that she and Grace are so close that they share a single life, intention, and glory. She thus suggests that the hero can approach Grace for help.

Spiritual meaning:
When Siva destroyed the three cities or Tripura, he did not harm the Asuras who had constructed them. In fact, he employed them as his gatekeepers. Similarly, Grace or Arul Shakti will transform the soul’s three mala, Anava, Karma and Maya into guards that watch the soul’s merging with the Divine. Scriptures insist that the three innate impurities should be destroyed to merge with the Lord. Here, Manikkavasakar shows that they should be transformed into guards that protect the soul.

The friend’s life and intention are the same as the heroine’s. That is, their goal is to have the hero, soul, merge with the heroine, Divine. Sivam is indicating that the soul can, with Arul shakti’s help, merge with him permanently. This upadesa is given by her eyes, nayana deeksha, that the soul hears within himself. Hence, it is said that her eyes extend up to her ears. Her
eyes are like an army, they fight the soul's innate impurities, the three cities and transform them. The heroine’s words are ‘pani mozhi’ pani means sweet, one that bids other to do something, one that makes others surrender. Sivam’s instructions have all these three qualities. Hence, it is making the soul surrender to its instructions and proceed with the necessary action.

Even if Divine experience occurs by accident a soul has work, with the help of grace, to make it a permanent experience. The Lord’s form as the eternal dance, Koothan, gives the pathway, the instruction, to achieve it.

The section, natural union, concludes with this verse.

No comments:

Post a Comment