Monday, 17 March 2025

1.11 Enquiring the bees

  1.11 நலம் புனைந்து உரைத்தல்

கூம்பல‌ம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடு உருக‌க் குனிக்கும்
பாம்பு அலங்காரப் பரன் தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பு அலம் சிற்றிடை ஈங்கு இவள் தீங்கனி வாய் கமழும்
ஆம்பலம் போது உளவோ அளிகாள் நும் அகம் பணையே

பொருள்:
வண்டுகளே! தமது இரு கைகளையும் தலைமேல் குவித்து தமது எலும்பு உருகுமாறு குனிந்து வணங்கும் அன்பர்களைக் கொண்ட, பாம்பை அலங்காரமாக அணிந்துள்ள பரன் இருக்கும் அம்பலத்தில், தேம்புகின்றன சிற்றிடையும் தீங்கனி போல மணம் வீசும் வாயையும் உடைய ஆம்பல் மலர் உளவோ (என்று தலைவன் கேட்கிறான்).
தலைவனைப் பார்த்து தலைவி புன்முறுவல் பூக்க அதனால் தலைவனது அயர்வு நீங்கியது. அயர்வு- பந்த பாசம்.

சிற்றின்ப நிலை:
கொளு- பொங்கு இழையை புனை நலம் புகழ்ந்து அம் கதிர்வேலோன் அயர்வு நீங்கியது.
ஆம்பல் மலர் என்ற குறிப்பால் தலைவியைப் பற்றி வண்டுகளிடம் தலைவன் கேட்கிறான்.

பேரின்ப நிலை:
அன்பால் நலம் கொண்டாடியது.
குருவின் புன்முறுவலைக் கண்டு ஆத்மா மகிழ்ந்து தனது அயர்வை நீக்குகிறது.

கையைக் கூப்பி வணங்குதல் என்பது நமது உடலில் உள்ள இரண்டு பாதிகளையும் ஒன்றாக்குவது. அஞ்சலி முத்திரை என்று அதற்கு ஆன்மீகத்தில் பெருமதிப்பு உள்ளது. இது மனதில் ஒரு சமநிலையை தோற்றுவிக்கிறது. கையைக் கூப்பி வணங்குவதில் ஒரு கிரமம் உள்ளது. கடவுளை வணங்கும்போது கைகள் தலைக்கு மேல் இருக்க வேண்டும். நண்பர்களை வணங்கும்போது நெஞ்சுக்கு நேராகவும் தந்தையை வணங்கும்போது முகத்துக்கு நேராகவும் தாயை வணங்கும்போது வயற்றுக்கு நேராகவும் குருவை வணங்கும்போது முகத்துக்கு நேராக நெற்றிக்கு சற்று மேலுயர்த்தி நெற்றியை மறைத்தபடி கைகள் இருக்க வேண்டும்.

எலும்பு உருக வணங்குதல். எலும்பு அல்லது அஸ்தியில் நமது கர்மங்கள் சேர்த்து வைக்கப்படுகின்றன. ஈம சடங்குகளில் அஸ்தியை நீரில் கரைப்பது அவரது கர்மா நாளடைவில் கரைந்து போகட்டும் என்று குறிக்கவே. இவ்வாறு இறைவனைப் பார்த்து எலும்பு உருக வணங்குவது என்பது நமது கர்மங்கள் அழியும் வண்ணம் வணங்குதல் என்று பொருள்படும்.

பாம்பை அலங்காரமாக உள்ள பரன்- பாம்பு என்பது குண்டலியை சக்தியைக் குறிக்கும். நமது கர்மங்களை செயல்பட வைப்பது இந்த சக்தியே. அதனால் இப்பாடலில் பாம்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவனின் உடலில் உள்ள ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொரு சக்தியைக் குறிக்கிறது. சிவனை வணங்குபவர் கர்மத்தைக் கடந்த பர நிலையை அடைவர். சிவன் ஆடும்போது அவரது பிற ஆபரணங்கள் தென்படுவதில்லை, பாம்பு மட்டுமே தென்படுகிறது. இறைவனின் ஆபரணங்களும் ஆயுதங்களும் அக்ஷரங்கள், மந்திர சொற்கள். இறைவனின் ஆட்டம் நடைபெறுவது சக்தி நிலையில், வாக்கும் மனமும் கடந்த நிலையில்.

பாடலர் தேம்பும்-சிவனைப் பாடாதவர்கள் கர்மாவின் துன்பத்தினால் தேம்புவர். அவர்களை இடைக்கு உவமையாகக் கூறியது-அந்த துன்பம் இருப்பது போல் தோன்றினாலும் அதுவும் அவன் அருளே, ஒரு படிப்பினையைத் தரவே என்று காட்ட. சிற்றிடை போல இருந்தும் இல்லாமலும் இருப்பதே அந்த கர்ம வினைப்பயன்கள். அவற்றின் இருப்பை அவற்றின் செயல்பாட்டிலிருந்து ஊகிக்க முடியும், உண்மையில் பார்க்க முடியாது.

தீங்கனி வாய் கமழும் ஆம்பல்- ஆம்பல் வாயில் தேன் இருப்பதால் இனிமையானது, இறைவனின் சொற்கள் அவரது மனம் கனிந்ததன் வெளிப்பாடு. ஆம்பல் என்பது இரவில் மதியின் ஒளியில் மலர்வது. இங்கு ஆம்பல் பேசுமா என்று கேட்பது, முழுமதியொளி பெற்ற குருக்களைக் கூறுவதைப் போல உள்ளது. சிவதலைவியைப் போல உபதேசம் செய்யக்கூடிய குருக்கள் தில்லை அம்பலத்தில், ஒளி நிலையில் உள்ளனரா என்று ஆத்மா வியக்கிறது. ஒளி எங்கும் நிறைந்திருந்தாலும் அந்த ஒளியைக் காண்பதற்கு குருவின் உபதேசம் வேண்டும். அந்த ஒளியைக் காட்டக்கூடிய உபதேசத்தைத் தரக்கூடிய குருக்கள் யாரும் இல்லை என்பதே கருத்து.

இந்தக் கேள்வியை தலைவன் வண்டுகளிடம் கேட்கிறான். வண்டுகள் என்பது உயர்ந்த ஆன்மாக்களை குறிக்கும். வண்டுகளுக்கு எந்த மலரில் தேன் இருக்கும் என்று தெரியும். அவை பல மலர்களுக்கு சென்று மகரந்தங்களை உண்ணும் தேனை சேகரிக்கும். நல்ல சீடர்களும் அவ்வாறு பல குருக்களிடம் அறிவுரை பெறுவர். வண்டுகள் மீண்டும் மீண்டும் மலர்களை நாடி செல்லும். அதுபோல சீடர்களும் மீண்டும் மீண்டும் குருக்களிடம் செல்வர். வண்டுகள் உண்ட பின் கண் வளர்ப்பதைப் போல சீடர்கள் தாம் கற்றவற்றை பின் தனியே தம்முள் சிந்தித்து அதை தமது ஞானமாக மாற்றுவர். வண்டுகள் தமது தேனை பிறருடன் பகிர்ந்துகொள்வதைப் போல தமது ஞானத்தை மற்றவர்களுக்கும் வழங்குவர். அதனால் தலைவன் அத்தகைய ஆத்மாக்களிடம் வினவுகிறான்.

வண்டுகளின் ஒலி பிரமரி எனப்படும் அது ஒருவித பிராணாயாமத்தை குறிக்கும். ஓங்காரத்தின் சொல்லற்ற ஒலி நிலையே பிரமரி. இவ்வாறு ஓங்காரத்தின் சூட்சும பொருளை பேசக்கூடிய குருக்கள் வேறு யாரும் தில்லையில் உள்ளனரோ என்று தலைவன் கேட்பதைப் போல உள்ளது. இத்தகைய உயர்ந்த ஆத்மாக்கள் கூறும் பதில் ஆப்த வாக்கியம் எனப்படும். பிரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்று அறிவைப் பெற மூன்று வழிகள் உள்ளன. நேரிடையான அனுபவம் பிரத்யக்ஷம், முன்பு ஏற்பட்ட நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பெறும் அறிவு அனுமானம், தனக்கு நன்மையையே சொல்வார் என்று நம்புபவரின் சொற்கள் ஆப்த வாக்கியம் எனப்படும். வேதங்களும் சாத்திரங்களும் இந்த வகையைச் சேர்ந்தவை.

ஆம்பல், வண்டுகள் என்பவை மருத நிலத்தைச் சேர்ந்த கருப்பொருள்கள். ஐந்து நிலங்களில் மிக உயர்ந்தது மருத நிலமே. ஆசாரியர்கள் மருத நிலத்தைப் போன்றவர்கள். அவர்கள் தம்மிடம் வரும் சீடர்களின் மனத்தை பண்படுத்தி அதில் நல்லுபதேசம் என்ற விதைகளை விதைத்து அவற்றை செழிப்பான ஞானம் என்ற பயிராக விளைய வைத்து அவர்களும் பிறரும் பயன் பெற வழி வகுக்கின்றனர். நன்கு பண்பட்ட நிலத்தில் நோய்கள் செடிகளைத் தாக்குவதில்லை. ஆச்சாரியரால் பண்படுத்தப்பட்ட மனதை உடைவர்களை மலங்கள் அணுகாது. அவ்வாறு அணுகா வண்ணம் குரு பாதுகாக்கிறார்.


1.11 Admiring the good qualities

Bees! With beloveds bowing with their bones melting and palms folded in supplication
The Paran of Tillai Ambalam, with snakes as ornament-she is here with quivering narrow waist
Like those who do not sing his praise, a mouth like sweet fruit. Are there
Fragrant water lilies in your Marudham land?

Simple meaning:
Sutra: The one with spear praises the lady and had his fatigue relieved. The hero is asking the bees whether there are water lilies in their land like the lady.

Spiritual meaning:
The soul sees Guru’s smile and is relieved of fatigue.

Folding palms in supplication: This process is Anjali mudra, which brings both halves of the body together and creates harmony. There is an order in this process. The hands are held above the head while worshiping God, in front of the chest for friends, in front of the face while saluting one’s father, in front of the stomach while saluting one’s mother, and in front of the face, a little above the forehead hiding it while saluting one’s Guru.

Worshipping with bones melting: Our karma are stored in our bones. Hence, the ritual of immersing the bones in flowing water with the intention that one’s karma will be washed away by the water. Worshipping God with bones melting means worshipping in such a way that one’s karma melt and vanish.

One with snakes as ornament: snake represents kundalini shakti which materializes our karma. Each one of the snakes on Siva’s body represents a particular shakti. When Siva dances in frenzy only the snakes are visible, one cannot see his other ornaments. Siva’s weapons and ornaments are aksharas, mantras. His dance is expression of his shakti, it occurs in a state beyond mind and vak.

Quivering waist like the weeping of those who do not praise Siva- Such people cry, burdened by karma. Their karma, like the lady’s waist, is not really obvious, it has to be guessed by its effect. They are only tools to bring awareness to the soul, not punishments.

Water lilies with sweet mouth- the lilies are sweet with honey. The Lord’s words are fruits, expressions of his heart. Lilies bloom in the night, in full moon, a mature mind. The soul is asking whether there are gurus with mature mind who can speak to him, give him upadesa, like Siva, the heroine. Even though the light of consciousness is present everywhere one needs a guru to see that light. The soul is admiring the Lord as the Guru.

The hero is asking these questions to the bees, whether they have such a flower in their 'aham' withint them. The bees are supreme souls. They know which flower has the best honey, which guru is the best. They collect honey from different flowers like good disciples who learn from different gurus. Like the bees resting after collecting honey, the disciple stays alone and eschews his learnings and convert them into personal experiences. Like the bees sharing honey with other the supreme souls share their learning freely with others. The hero is talking to such souls.

The sound of bees is called brahmari. It refers to a type of pranayama. The sound state of omkara is brahmari. The soul is talking to souls who are in this supreme state of brahmari. The words of such souls is called aptha vakhya. Knowledge is obtained through three means, direct perception of prathyaksha, inference from previous direct experience or anumana, and sabdha or words of supreme souls. Veda and sastra belong to this category.

Water lilies belong to Marudham land, the well-tended agricultural land that offers food for many. The plants are protected from diseases and nurture for the best yield. Gurus are like marudham. They are supreme souls who plant seeds of knowledge in their disciples, protect them from innate impurities, the diseases and ensure the best outcome.

No comments:

Post a Comment